ரூ.5 லட்சம் வரை செலுத்த யு.பி.ஐ., பயன்படுத்தலாம்…!

இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. யு.பி.ஐ., பயன்படுத்தி மூன்று வகை தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பு ₹5 லட்சமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வரி செலுத்துதல், மருத்துமனைகள், கல்வி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சில்லறை நேரடி திட்டங்களுக்கு இன்று முதல் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தலாம் யு.பி.ஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

Comments are closed.