‘வந்தே மெட்ரோ ரயில்’ சேவை: ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்…
வந்தே பாரத் ரயில்களைத் தொடர்ந்து வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். குஜராத் மாநிலம் புஜ் – ஆமதாபாத் இடையே இயக்கப்படும் இந்த ரயிலின் பெயரை, நமோ பாரத் ரேபிட் ரயில் என இரயில்வேத்துறை பெயர் மாற்றம் செய்துள்ளது. பிராந்திய நகரங்களை இணைக்கும் நோக்கத்தில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்கு மாற்றாக இந்த ரயில்கள் இருக்கும். மக்கள் அதிகம் கூடும் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. நமோ பாரத் ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும். 1,150 பயணிகள் பயணம் செய்யலாம். புஜ் முதல் ஆமதாபாத் இடையிலான 359 கி.மீ., தூரத்தை 5:45 மணி நேரத்தில் கடந்து விடும். 9 இரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் இன்று துவக்கப்பட்டாலும், வழக்கமான பயணிகள் சேவை நாளை தான் துவங்குகிறது. இந்த ரயிலில் பயணிக்க கட்டணம் ரூ.455 பெட்டிகள் முழுதும் ஏசி வசதி செய்யப்பட்டு உள்ளது.
Comments are closed.