வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!!!
ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் அப்டேட்டுகளை தொடர்ந்து படக்குழு கொடுத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி இந்தப் படத்தின் முதல் பாடலான `மனசலாயோ’ என்ற பாடல் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது. மேலும், ஜெயிலர் படத்தில் வரும் Hukum பாடலை எழுதிய சூப்பர் சுபு தான் இந்தப் பாடலையும் எழுதியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்தப் பாடலுக்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Comments are closed.