மாநாடு குறித்து நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய விஜய்…
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கட்சி, முதல் மாநாட்டை வெற்றி கரமாக நடத்த முனைப்பு காட்டி வருகிறது . 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்கவுள்ள மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை போலீசார் வழங்கி உள்ளார்கள். இந்நிலையில் மாநாட்டுப் பணிகளை விரைவுப்படுத்துவது தொடர்பாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார் . இந்த ஆலோசனையில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாடு தொடர்பாக மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டத்தை கூட்டுவது குறித்தும், மாவட்ட அளவில் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் விவரங்களை தயாரிக்கவும் இந்த கூட்டத்தில் விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தொகுதி வாயிலாக தொண்டர்களை மாநாட்டிற்கு அழைத்து வருவதற்கு அமைக்கப்பட்ட பொறுப்பாளர்கள் , குழு உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும் விஜய் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. மாநாட்டிற்கு குறுகிய நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுப்படுத்துவது,மழை வந்தால் மாநாட்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் விஜய் கலந்து ஆலோசித்தார் .இந்த வாரத்திற்குள் மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகளை முடிக்க விஜய் உத்தரவிட்டு உள்ளார். மாநாட்டு பந்தல்கால் நடும் பணியை எப்போது நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது .மாநில நிர்வாகிகளை தொடர்ந்து மாவட்ட தலைவர்கள் ,மாவட்ட செயலாளர்களுடன் விஜய் விரைவில் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
Comments are closed.