புதியதாக அப்டேட்டை வழங்கிய வாட்ஸ்அப்
வாட்ஸ் ஆப் வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ட் என்ற புதிய அப்டேட்டை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். உலகில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் உலகில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. சமீபத்தில் மெட்டா நிறுவனம் ஏஐ சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மின்னஞ்சல் எழுத, கவிதை, மொழிபெயர்ப்பு, டெக்ஸ்டுகளை சுருக்குதல், இமேஜ் மற்றும் GIF உருவாக்கம் என பலவற்றை நம்மால் செய்ய முடியும். கூடுதலாக பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Comments are closed.