சென்னையில் நள்ளிரவு மின்தடை ஏன்? மின்சார வாரியம் விளக்கம்!

சென்னையில் தீ விபத்தால் மின் தடை ஏற்பட்டது. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 சதவீதம் மின் வினியோகம் சரி செய்யப்பட்டது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: அலமாதி துணைமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் மின்தடை ஏற்பட்டது. தீ விபத்துடன், ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. வட சென்னை, கலிவேந்தம்பட்டு, ஸ்ரீ பெரும்புதூர் மின்னூட்டிகளில் அதிக மின் பளு காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று மின் விநியோகம் வழங்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 சதவீதம் மின் வினியோகம் வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.