தீபாவளி பட்டாசுக் கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்….!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், உரிய நிபந்தனைகளின்படி https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.மேற்கண்ட விண்ணப்பங்களை வருகிற 19-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.