ஏ.ஐ. மூலம் ஈசியா எடிட் செய்யலாம்..போட்டோஸ் ஆப்-ஐ அப்டேட் செய்த கூகுள்..!

கூகுள் நிறுவனம் தனது கூகுள் போட்டோஸ் செயலியின் வீடியோ எடிட்டரில் புதிய சேவைகளை சேர்த்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. அவை அதிக பயனுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு வீடியோ எடிட் செய்வதை எளிமையாக்கவே புதிய வசதிகள் வழங்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் போட்டோஸ் செயலியில் அப்டேட்டெட் ட்ரிம் டூல் (Updated Trim Tool), ஆட்டோ என்ஹன்ஸ் பட்டன் (Auto Enhance Button), ஸ்பீடு (Speed Tool) போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏஐ சார்ந்த பிரீசெட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த அம்சங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

Comments are closed.