ZOHO : சென்னையில் Application Security Engineers வேலைவாய்ப்பு!

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ZOHO-வில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ZOHO, தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் மத்தளம்பாறை போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது, ZOHO-வில் Application Security Engineers பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு தேவையான தகுதிகள்: பாதுகாப்பு பிரேம்வொர்க்ஸ், அப்ளிகேஷன் செக்யூரிட்டி டூல்ஸ், வெப் செக்யூரிட்டி, ஏபிஐ செக்யூரிட்டி, வல்னரபிலிட்டி அசஸ்மெண்ட் போன்றவற்றில் திறமை வேண்டும். மேலும், பைத்தான், ஜாவா, C/C++, Go போன்ற ப்ரோகிராமிங் மற்றும் ஸ்கிரிப்டிங் மொழிகளில் அடிப்படையான அறிவு தேவை. அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், தனியாக (Independently) பணியாற்றும் திறன் ஆகியவை கூட தேவைப்படும்.

தற்போதைய அறிவிப்பில் சம்பள விவரங்கள் குறிப்பிடப்படவில்லை, ஆனால் தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ZOHO-வில் தற்போது பணியாற்றுபவர்கள் மற்றும் 2025ம் ஆண்டில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேற்கூறிய தகுதிகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்தவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் மேலும் தகவலுக்கு [Click Here]

- Advertisement -

Comments are closed.