‘தி கோட்’ படத்தை திரையில் பார்த்த திரிஷா, சிவகார்த்திகேயன்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். தி கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை திரிஷா நடனமாடியுள்ளார். மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னை மதுரவாயல் ஏஜிஎஸ் திரையரங்கில் தி கோட் படத்தை பார்ப்பதற்கு நடிகை திரிஷா வந்துள்ளார்.
அதே போல் கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் தி கோட் படத்தை கண்டு களித்தார்.

Comments are closed.