குரூப் 2 தேர்வர்களுக்கான விதிமுறைகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி…!

9 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.

TNPSC குரூப் 2 தேர்வு வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
1.9 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் சலுகை நேரமாக காலை 9 மணி வரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.தேர்வு நேரம் முடியும் வரை தேர்வர் யாரும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்2..தேர்வர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் (Hall Ticket) தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும், தவறினால் தேர்வர், தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.3.தேர்வர் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை (PANCARD) / வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளி நகலை கொண்டு வர வேண்டும். குரூப் 2 முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.