ஆதார் கார்டில் அப்டேட் செய்வதில் புதிய சிக்கல்…? இ-சேவை மையங்களில் குவியும் மக்கள் …!

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க வருகிற 14-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதார் மையங்களில் மக்கள் அலைகிறார்கள். ஆனால் சர்வர் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஆதார் பயோமெட்ரிக் உடன் தற்போது எடுக்கப்படும் பயோமெட்ரிக்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பலரும் இ-சேவை மையங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள் மக்கள்.சர்வர் சரியாக இயங்காததாலும் இந்த பணிகள் சரியாக மேற்கொள்ள முடியவில்லை.முன்பு ஒரு நாளைக்கு 50-க்கும் மேலான ஆதார் திருத்தங்களை செய்து கொடுத்த ஊழியர்கள், தற்போது ஒரு நாளைக்கு 20-க்கு மேல் செய்து கொடுக்க முடியவில்லை என்கிறார்கள் இ-சேவை உரிமையாளர்கள்.

- Advertisement -

Comments are closed.